சினிமா

”கலைஞரின் கதை வசனத்தில் ’பொன்னர் சங்கர்’ படத்தில் நடித்தது பெரும் பாக்கியம்” - பிரஷாந்த்

”கலைஞரின் கதை வசனத்தில் ’பொன்னர் சங்கர்’ படத்தில் நடித்தது பெரும் பாக்கியம்” - பிரஷாந்த்

sharpana

”கலைஞரின் கதை வசனத்தில் ’பொன்னர் சங்கர்’ படத்தில் நடித்தது பெரும் பாக்கியம்” என்று கருணாநிதியுடனான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் நடிகர் பிரஷாந்த்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1947 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ படத்திலிருந்து 60 படங்களுக்குமேல் கதை வசனம் எழுதியுள்ளார். அவர், கதை வசனத்தில் கடைசியாக பிரஷாந்த் நடிப்பில்,கடந்த 2011 ஆம் ஆண்டு  ‘பொன்னர் சங்கர்’ படம் வெளியானது. இப்படத்தில், இரட்டை வேடங்களில் நடித்து பிரஷாந்த் கவனம் ஈர்த்தார்.

இன்று கருணாநிதின் 98 வது பிறந்தநாளையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாள்.நான் நேசித்த தலைவரை மகிழ்வோடு நினைவு கூறுகிறேன். அவரின் கதை வசனத்தில் பிரம்மாண்டமான சரித்திர படம் பொன்னர் சங்கரில் நடித்ததும் நான்கு வருடங்கள் அவரோடு நெருங்கி பயணித்ததும் எனது பெரும் பாக்கியம். தலைவரின் நினைவுகளுடன் பிரஷாந்த்” என்று பெருமையுடன் நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.