சினிமா

பாகுபலி 2 டிரைலர் பார்த்ததும் கஷ்டமெல்லாம் போச்சு: பிரபாஸ்

Rasus

’பாகுபலி-2’ படத்தின் டிரைலரை பார்த்ததும் படத்துக்காக நான் பட்ட கஷ்டமெல்லாம் மறந்துவிட்டது என்று படத்தின் ஹீரோ பிரபாஸ் கூறினார்.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம் பாகுபலி. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.

இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது. இதன் டிரைலர் நேற்று வெளியானது. இதுபற்றி பேசிய படத்தின் ஹீரோ பிரபாஸ், ‘இந்தப் படத்துக்காக நான்கு வருடங்களுக்கு மேல் கஷ்டப்பட்டேன். படத்தின் டிரைலரைப் பார்த்ததும் நான் பட்ட கஷ்டங்கள் மறந்துவிட்டன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நூறு சதவிகிதம் பூர்த்தி செய்யும் படமாக ’பாகுபலி 2’ இருக்கும்’ என்றார்.