சினிமா

கேன்ஸ் விழாவில் மாதவனின் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ பார்த்து ரசித்த பார்த்திபன்!

sharpana

கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ‘தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்’ படத்தை பார்த்து ரசித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

பிரான்ஸில் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இதில், இந்தியா சார்பில் ஏ.ஆர் ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், பா.ரஞ்சித், சேகர் கபூர், பூஜா ஹெக்டே, தமன்னா, பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாமும் ’தி ராக்கெட்ரி நம்பி எஃப்கெட்’ நேற்று திரையிடப்பட்டது.  நடிகர் பார்த்திபன், அவரது மகள் கீர்த்தனா, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் பார்த்து ரசித்தனர். இந்தப் புகைப்படங்களை நடிகர் பார்த்திபன் உற்சாகமுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, கிரையோஜனிக் ராக்கெட் தொழில் நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ல் கேரள காவல்துறையால் கைதாகி, பின்னர் நிரபராதி என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ‘தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்’ படத்தை உருவாக்கியுள்ளார் மாதவன்.

இதில் நம்பி நாரயணன் கதாபாத்திரத்தில் நடித்ததோடு இந்தப் படத்தை இயக்கியுள்ளதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட 5 மொழிகளில் ஜூலை 1-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.