லால்சலாம், அயலான், கேப்டன் மில்லர் ட்விட்டர்
சினிமா

பொங்கலுக்கு தள்ளிப்போகும் கேப்டன் மில்லர்; ரஜினி, சிவகார்த்திகேயனுடன் மோதும் தனுஷ்!

பொங்கல் பண்டிகையின்போது ‘அயலான்’, ‘லால் சலாம்’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படமும் வெளியாக இருக்கிறது.

Prakash J

‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’ ஆகியப் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார், சந்தீப் கிஷன், ப்ரியங்கா அருள்மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், மூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் மூன்றுவிதமான தோற்றங்களில் தனுஷ் வரவுள்ளதாகவும், இரண்டாம் பாதியில் போர் காட்சிகள் இருக்கும் என்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

கிட்டத்தட்ட ‘கே.ஜி.எஃப்’ போன்று இருக்கும் என்றும் அவர் கூறியிருந்த நிலையில், அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பொங்கலின்போதுதான் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படமும் வெளியாக இருப்பதாக படக்குழுவால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சீனாவின் ஆதிக்கத்திற்குத் தடையா?.. இலங்கையில் துறைமுகம் அமைக்கும் அதானிக்கு உதவும் அமெரிக்கா!

கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கிய அயலான் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். முன்னதாக, தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படமும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், சிறப்புட் தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால், நடிகர் தனுஷ் நண்பர் சிவகார்த்திகேயன், மனைவி மற்றும் மாமனாருடன் மோத இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ’அரசியலின் மெகா ஸ்டார்’ பிரதமர் மோடி குறித்த PhD முடித்த இஸ்லாமியப் பெண்! ஆய்வு சொல்வதென்ன?