நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்  pt desk
சினிமா

சிறந்த நடிகர்.. நடிகர்களது ஆதர்ச டப்பிங் கலைஞர்... மறைந்தார் டெல்லி கணேஷ்

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ், வயது மூப்பு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார்.

PT WEB

1976ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம், திரையுலகிலகில் அறிமுகமானவர் டெல்லி கணேஷ். தொடர்ந்து, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், குணச்சித்திரம், நகைச்சுவை உள்பட எல்லா கதாபாத்திரங்களிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

மூத்த நடிகர் டெல்லி கணேஷ்(80) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்

தமிழ்நாடு அரசின் கலைமாமணி பெற்றவர். நடிப்பு மட்டுமின்றி, சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பங்களித்தவர். 80 மற்றும் 90களில் தங்கள் திரைப்படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது, டெல்லி கணேஷ் தங்களுக்கு குரல் கொடுப்பதை, மோகன்லால், சிரஞ்சீவி என இருவருமே விரும்பினர்.

சின்னத்திரை, இணைய தொடர்களிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ், 1964 முதல் 1974ஆம் ஆண்டு வரை, இந்திய விமானப்படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 80வயதில் மறைந்த டெல்லி கணேஷின் உடல், சென்னை ராமாபுரத்தில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.