சினிமா

நாம ஊமையா இருக்கிற வரைக்கும் ஜனநாயகம் செவிடாதான் இருக்கும் - தெறிக்கவிடும் ’அட்ரஸ்’ டீசர்

நாம ஊமையா இருக்கிற வரைக்கும் ஜனநாயகம் செவிடாதான் இருக்கும் - தெறிக்கவிடும் ’அட்ரஸ்’ டீசர்

sharpana

நடிகர் அதர்வா முரளியின் ’அட்ரஸ்’ பட டீசரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 

‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’, ’வானவராயன் வல்லவராயன்’ படங்களை இயக்கிய இயக்குநர் இராஜமோகன் ‘அட்ரஸ்’ படத்தை இயக்கியுள்ளார். பாடகர் எஸ்.பி.பி சரண் தயாரிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான, இவரின் ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றதோடு யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. குறிப்பாக, இப்படத்தில், இடம்பெற்ற யுவன் –எஸ்பிபி சரண் குரலில் ’கடலோரம் ஒரு ஊரு’, ஜாவித் அலி குரலில் ‘சின்னஞ் சிறுசுக மனசுக்குள்’ பாடல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக உள்ளன.

இந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ’அட்ரஸ்’ படத்தை இயக்கி வருகிறார் இராஜமோகன். 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டப்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு தனது அட்ரஸை தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மிக த்ரில்லாக இயக்கி வருகிறார் இராஜமோகன் என்று சொல்லப்படுகிறது.

அதர்வா முரளியும் இசக்கி பரத்தும் நடிக்கும் இப்படத்தின் டீசரை இன்று இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டார். டீசரோடு சேர்த்து கெளதம் மேனன் குரலில் ”என் ஊருக்கு ரோடு வேணும்னா, என் ஊருக்கு கரன்ட் வேணும்னா, என் ஊருக்கு தண்ணி வேணும்னா, என் புள்ளைக்கு படிப்பு வேணும்னா உன்னை மண்டிப்போட்டு கும்பிடணும்ல… யார்ரா நீ”…. “நாம ஊமையா இருக்கிற வரைக்கும் ஜனநாயகம் செவிடாதான் இருக்கும். கத்தணும் ஜனநாயகத்தோட செவிப்பறை கிழியறளவுக்கு கத்தணும்’ போன்ற கூர்மையான வசனங்கள் கவனம் ஈர்த்துள்ளன.