சினிமா

நடிகர் சங்க தேர்தல் : விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி மனுக்கள் நிராகரிப்பு

webteam

நடிகர் சங்க தேர்தலில் விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்ட 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக 90 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். நேற்று மாலை 5 மணியோடு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இயக்குநர் பாக்யராஜ் அணியில் போட்டியிடும் விமல், ரமேஷ் கண்ணா மற்றும் ஆர்த்தி ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சந்தா தொகையை கட்டாதது உள்ளிட்ட காரணங்களால் வேட்புமனுக்க நிராகரிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதாரவி அணியை எதிர்த்து விஷாலின் பாண்டவர் அணி போட்டியிட்டது. இந்த முறை விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜின் தலைமையிலான சுவாமி சங்கராதாஸ் அணி போட்டியிடுகிறது.