சினிமா

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி: நாமக்கல் சகோதரிகளை வாழ்த்திய அஜித்!

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி: நாமக்கல் சகோதரிகளை வாழ்த்திய அஜித்!

Sinekadhara

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு தகுதிபெற்ற நாமக்கல்லை சேர்ந்த சகோதரிகள் ராகவி, ரசிகாவை நடிகர் அஜித் வாழ்த்தியுள்ளார்.

சென்னை ஆவடி அருகேயுள்ள வீராபுரத்தில் 46-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் 12-வது தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்றது. இதில், நாமக்கல் ஷூட்டிங் அகாடமியை சேர்ந்த 12 பேர் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். 25 மீட்டர் 22 ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் சீனியர் பிரிவில் (ISSF) தனித்திறன் போட்டியில் ராகவி தங்கப் பதக்கம் வென்றார். இவர் தொடர்ந்து 3-வது முறையாக தங்க பதக்கம் வென்றார்.

இதேபோல் இவரது சகோதரியான ரசிகாவும் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றார். இவர்கள் இருவருமே அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இப்போட்டிகளில் நாமக்கல் ஷூட்டிங் அகாடமியை சேர்ந்த கேப்டன் பாண்டியன், தேவராஜ், மனோஜ் ஆகியோர் 25 மீட்டர் 22 ஸ்டாண்ர்டு பிஸ்டல் மற்றும் 32 சென்டர் பையர் பிஸ்டர் குழு போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்ற சகோதரிகளான ராகவி, ரசிகா அகியோர் நடிகரும், துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவருமான அஜித் குமார் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற ராகவி, நம்மிடம் பேசும்போது, "தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதோடு, எதிர் காலத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு" என்றார்.