சினிமா

'வலிமை' வசூலில் சாதனை - மகிழ்ச்சியில் இயக்குநரை சந்தித்த விநியோகஸ்தர்

'வலிமை' வசூலில் சாதனை - மகிழ்ச்சியில் இயக்குநரை சந்தித்த விநியோகஸ்தர்

sharpana

அஜித்தின் ‘வலிமை’ வசூலைக் குவித்துக்கொண்டு வருவதால் படத்தின் விநியோகஸ்தர் கலைமகன் இயக்குநர் ஹெச்.வினோத்தை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ கடந்த 24 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36,14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளான நேற்று ரூ.24.62 கோடி ரூபாய்யும் வசூலித்து, மொத்தம் ரூ.60.79 கோடி ரூபாய்யை தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. அதனை நிரூபிக்கும் விதமாய் ‘வலிமை’ ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘வலிமை’ படத்தின் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கைப்பற்றியிருந்தார்.

இந்த நிலையில், ’வலிமை’ நல்ல லாபத்தை கொடுத்திருப்பதால் இயக்குநர் ஹெச்.வினோத்தை நேரில் சந்தித்து கலைமகன் முபாரக் வாழ்த்தும் நன்றியும் கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்த சவாலான காலகட்டத்தில் பிரம்மாண்டமாக ’வலிமை’ படத்தை கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு விநியோகிஸ்தராக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வலிமையான மகிழ்ச்சி” என்று உற்சாகமுடன் தெரிவித்துள்ளார். கலைமகன் முபாரக் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடிமுழக்கம்’ படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.