சினிமா

தனது ட்வீட்டை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த அபிஷேக் பச்சன் 

தனது ட்வீட்டை விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த அபிஷேக் பச்சன் 

EllusamyKarthik

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சுமார் 3.94 மில்லியன் மக்கள் இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சூழலில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நேற்று ட்விட்டரில், திரையரங்கம் மீண்டும் திறப்பது தொடர்பாக ட்வீட் செய்திருந்தார்.

‘பாப்கார்ன், சமோசா, கூல் டிரிங்க்ஸுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கலை கட்டும் பூமியின் ஆகச்சிறந்த இடங்களில் ஒன்று திரையரங்குகள். காத்திருக்க முடியவில்லை’ எனத் தெரிவித்திருந்தார். அதனை ஒரு சிலர் TROLL செய்துவருகின்றனர். 

‘அப்போது திரையரங்கம் சென்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நபர்களுக்கான மருத்துவ செலவை ஏற்க நீங்கள் தயாரா? ஆமாம் என்றால் கொண்டாடுங்கள். இல்லை என்றால் உங்கள் வாயை மூடிக் கொள்ளவும்’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார். 

‘நீங்கள் ஏன் எனது ட்வீட்டை மீண்டும் ஒரு முறை படிக்கக் கூடாது. நான் காத்திருக்க முடியவில்லை என்றுதான் சொல்லியுள்ளேன். அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு திரையரங்குகள் திறக்க பாதுகாப்பான நேரம் என அரசு முடிவெடுக்கும். அதை தான் நானும் விரும்புகிறேன். இதில் கோபப்படுவதற்கு எதுவுமே இல்லை’ என தெரிவித்துள்ளார்.