சினிமா

“மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருகிறேன்” - ஆமிர்கான் மகள்

“மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருகிறேன்” - ஆமிர்கான் மகள்

webteam

பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கான் மகள் ஐராகான் தான் மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதாகவும், அது தனக்குள் எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசியிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கும் அவரது முதல் மனைவி ரீனா தத்தாவிற்கும் 2002-ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இவரது மகள் ஐராகான். இவர், கடந்த நான்கு வருடங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், 14 வயதிலேயே தான் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தநிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் மனஅழுத்ததில் இருந்து மீண்டு வருவதாகவும், அது தனக்குள் எவ்வாறு நிகழ்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, “கடந்த சில வாரங்களாக எனது வாழ்கை நார்மலாக நகர்வதை உணர முடிகிறது. மனச்சோர்வையும் கையாள முடிகிறது. யாரிடமாவது பேசும்போது நான் வேறு விதமாக நடந்துகொள்வதாக தெரிகிறது. அது தற்போது எனக்குள் ஒரு பகுதியாக இருக்கிறது.

அதன் மூலம் நான் ஓவர் ரியாக்ட் ஆகிறேன். அது எனது மனச் சோர்வின் வெளிப்பாடே. எனக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை நான் செய்வதில்லை. போதை மருந்துகளை உபயோகிப்பதில்லை. அதிகமாக காபி குடிப்பதில்லை. எனது வாழ்க்கைக்கு உடனடியான அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை. நான் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நான் சோர்வாக இருந்தால் அதனை நான் யாருக்கும் சொல்வதில்லை. ஏனென்றால் அது எனக்குள் அதிகமாகி ஒருக்கட்டத்தில் வெடிக்கிறது. அப்போது நான் முழுவதுமாக உடைகிறேன். அதன் பின்னர் நான் நன்றாக இருப்பதாக உணர முடிகிறது. நான் உடையும் வரை அதைப்பற்றி என்னால் விளக்க முடியாது. அந்த உடைதல் என்னை நல்லவிதமாக உணரவைக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.