சினிமா

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அஜித் மகன் ஆத்விக் புகைப்படம்

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அஜித் மகன் ஆத்விக் புகைப்படம்

webteam

ட்விட்டரில் அஜித் தன் மகன் ஆத்விக் உடன் வலம் வரும் புகைப்படங்கள் சில ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சினிமாவில் பெரிய ஸ்டார் அஜித். ஆனால் அந்த அடையாளம் எல்லாம் அவர் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை. அதனால்தான் அவர் தனது ரசிகர்களால் தல என கொண்டாடப்படுகிறார். தனக்கு தனியான நட்சத்திர அந்தஸ்து கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் ஒரு சாதாரண மனிதனாகவே அவர் சொந்த வாழ்க்கையில் வலம் விரும்புகிறார். வாக்குச் சாவடிக்கு அவர் வாக்களிக்க வரும் போதேல்லாம் வரிசையில் நின்று ஓட்டு போட்டுவிட்டு போவது அவரது ஸ்டைல். தற்சமயம் அவரது மகன் ஆத்விக்கை பள்ளிக்கு அழைத்து கொண்டு விடுவதும் மாலை அவனை வீட்டுக்கு அழைத்து வருவதையும் ஒரு தந்தையாக அவரே மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் பள்ளி பெற்றோர் விழாவுக்குப் போன அஜித் அங்கு படிக்கும் சக குழந்தைகளின் பெற்றோர்களுடன் சகஜமான பழகும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் தன் மகனை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அவர் மிக இயல்பாக பள்ளி நிகழ்ச்சியை கவனித்து கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. அதை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பரபரப்பாக பகிர்ந்து வருகின்றனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. #AadvikAjith என்ற ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் ஆக்கி வருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். 

இந்தப் படங்கள் வெளியான சற்றுநேரத்தில் பலர் வினயல் போர்ட் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். அந்தப் படங்களும் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.