சினிமா

’பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது’: சபரிமலை விவகாரத்தில் பிரியா வாரியர்

’பெண்களால் 41 நாள் விரதம் இருக்க முடியாது’: சபரிமலை விவகாரத்தில் பிரியா வாரியர்

webteam

’’சபரிமலை விவகாரத்தில் பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்’’ என்று நடிகை பிரியா வாரியர் கூறினார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்து வந்தன. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தபோதும் ஆளும் கட்சி, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் தீவிரமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக கேரளாவை சேர்ந்த கனகதுர்கா (44), பிந்து (42) ஆகிய இரண்டு பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் மற்றும் நாயர் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் திருந்திருந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் ’ஒரு அடார் லவ்’ படத்தில் நடித்துள்ள பிரியா வாரியரிடம், சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதிப்பது குறித்துக் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர் கூறும்போது, ‘’இது மிகவும் அர்த்தமற்றது என நினைக்கிறேன். இந்தப் பிரச்னை பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. சமத்துவத் திற்க் காகப் போராட வேண்டும் என்றால் நீண்ட தூரம் செல்ல வேண்டும். சபரிமலை விவகாரத்தில் பல ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரு ம் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும். ஒரு பக்தர் மலைக்குச் செல்ல 41 நாள் விரதம் இருக்கிறார் என்றால் அதைப் பெண்கள் கடைபிடிக்க முடியா து. 41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது. சபரிமலை செல்ல அதுதான் தடையாக இருக்கிறது’’ என்றார்.