சினிமா

அஜித் ரசிகர் பகிர்ந்த விவேக், விஜயகாந்த் காமெடி வீடியோ - ரீட்வீட் செய்து ரஹ்மான் பதிவு

அஜித் ரசிகர் பகிர்ந்த விவேக், விஜயகாந்த் காமெடி வீடியோ - ரீட்வீட் செய்து ரஹ்மான் பதிவு

சங்கீதா

அஜித் ரசிகர் ஒருவர் ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ படத்தில் தமிழ் மொழி பற்றி விஜயகாந்த் - விவேக் பேசும் காமெடி வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில், அதனை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரீ-ட்வீட் செய்து விவேக்கை மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.

ராமநாரயணண் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக், ராம்கி, ரோஜா, விந்தியா, கோவை சரளா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முழு நகைச்சுவையுடன் உருவாகியிருந்த இந்தப் படத்தில், திரைப்பட இயக்குநராக முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விவேக். மேலும், நடிகர் விஜயகாந்தை சந்தித்து கதை சொல்லப்போகும்போது, தமிழ் மொழி பற்றியும், தமிழர்கள் பற்றியும் பெருமை பொங்கும் வகையிலும், இளையதலைமுறையினருக்கு தமிழ் மொழி அவசியம் எனவும் விஜயகாந்த் -விவேக் பேசுவது போன்ற கருத்து நகைச்சுவை அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த வீடியோவை 'தல தீபன்' என்ற பெயரில் அஜித் ரசிகர் ஒருவர், ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா, கேப்டன்’ என்று பகிர்ந்திருந்தார். இதனை ரீட்வீட் செய்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், காமெடி லெஜண்ட் விவேக்கை மிஸ் செய்வதாகவும், அவர் இல்லாதது பெரும் இழப்பு என்றும் கேப்ஷன் இட்டுள்ளார். ஆஸ்கர் விருது நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், எதற்காக இதனை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்தார் என்று தெரியவில்லை என்றாலும், மறைந்த நடிகர் விவேக்கை மிஸ் செய்வதாக ரசிகர்களும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.