சினிமா

பெப்சி தொழிலாளர்கள் போராட்டம்: 99 சதவீத படப்பிடிப்பு ரத்து

பெப்சி தொழிலாளர்கள் போராட்டம்: 99 சதவீத படப்பிடிப்பு ரத்து

webteam

ஊதியப் பிரச்னை தொடர்பாக பெப்சி எனப்படும் திரைப்பட தொழிலாளர் அமைப்பினரின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்வதால் 99 சதவீத படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது.

பெப்சி தொழிலாளர் அமைப்பினரின் வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், வேறு மாநிலத் திரைப்படத் தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருந்தது. ஆனால், தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளில் வேறு‌ மாநில தொழிலாளர்கள் பணியாற்றக் கூடாது என பெப்சி கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ் திரைப்பட படப்பிடிப்புகளில் பணியாற்ற மாட்டோம் என மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதனால், ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 99 சதவிகித தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ளன. பெப்சி தொழிலாளர்களை மட்டுமே தயாரிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டும், ஏற்கனவே இருந்த ஊதிய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களுக்கு இடையேயான பொதுவிதி புத்தகத்தை விரைவில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெப்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.