கேரளா மாநில திரைப்பட விருதுகள் முகநூல்
சினிமா

54 ஆவது கேரள மாநில திரைப்பட விருதுகள்: 9 விருதுகளை தட்டித்தூக்கிய ‘ஆடு ஜீவிதம்’!

54 ஆவது கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பானது கேரளா கலாசாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

54-ஆவது கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பானது அம்மாநில கலாசாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் அவர்களால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பட்டியலில், சிறந்த படத்திற்கான விருது ‘காதல் தி கோர்’ படத்திற்கும், சிறந்த நடிகர் விருது ‘ஆடுஜீவிதம்’ படத்திற்காக பிரித்விராஜ் சுகுமாரனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ’உள்ளொழுக்கு’ படத்திற்காக ஊர்வசிக்கும், ’தடவு’ திரைப்படத்திற்காக பீனா ஆர் சந்திரனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆடு ஜீவிதம் திரைப்படமானது 9 விருதுகளை தட்டித்தூக்கி சாதனையை படைத்துள்ளது.

இதன்படி, மற்ற பிரிவுகளில் விருதுகளை வென்றவர்களின் பட்டியலை காணலாம்.

  • சிறந்த படம் - காதல் தி கோர்

  • சிறந்த நடிகர் - பிரித்விராஜ் சுகுமாரன் (ஆடுஜீவிதம்)

  • சிறந்த நடிகை - ஊர்வசி (உள்ளொழுக்கு), பீனா ஆர் சந்திரன் (தடவு)

  • சிறந்த இயக்குநர் - ப்ளெஸ்ஸி (ஆடுஜீவிதம்)

  • சிறந்த படம் (2ம் இடம்) - இரட்டா (ரோகித் எம்.ஜி.கிருஷ்ணன்)

  • சிறந்த அறிமுக இயக்குநர் - ஃபாசில் ரஸாக் (தடவு)

  • சிறந்த ‘பிரபலமான திரைப்படம்’ - ஆடுஜீவிதம்

  • சிறந்த ஒலி வடிவமைப்பு - ஜெயதேவன் சக்கடத், அனில் ராதாகிருஷ்ணன் (உள்ளொழுக்கு)

  • சிறந்த நடிகர் (நடுவர் குழு தேர்வு) - சுதி கொழிகோட் (காதல்), கே.ஆர்.கோகுல் (ஆடுஜீவிதம்), கிருஷ்ணன்

  • சிறப்பு விருது (சினிமா கலையில் பிரமாதமான பங்களிப்பு) - ககனாச்சாரி

  • சிறந்த பெண் / திருநர் சமுகத்துக்கான விருது (நடுவர் குழு தேர்வு) - இயக்குநர் ஷாலினி உஷாதேவி (என்னென்னும்)

  • சிறந்த VFX - ஆண்ட்ரூ டி க்ரூஸ், விஷக் பாபு (2018)

  • சிறந்த நடன இயக்குநர் - ஜிஷ்னு (சுலேகா மன்ஸில்)

  • சிறந்த பின்னணி குரல் (பெண்) - சுமங்கலா - ஜனனம் 1947, ப்ரணயம் தொடருன்னு

  • சிறந்த பின்னணி குரல் (ஆண்) - ரோஷன் மேத்யூ - உள்ளொழுக்கு, வாலாட்டி

  • சிறந்த ஆடை வடிவமைப்பு - ஃபெமினா ஜாபர் - ஓ பேபி

  • சிறந்த ஒப்பனை கலைஞர் - ரஞ்சித் அம்பாடி (ஆடுஜீவிதம்)

  • சிறந்த கலரிஸ்ட் - வைஷால் சிவ கனேஷ் (ஆடுஜீவிதம்)

  • சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - ரசூல் பூக்குட்டி, ஷரத் மோகன் (ஆடுஜீவிதம்)

  • சிறந்த Sync Sound - ஷமீர் அகமது (ஓ பேபி)

  • சிறந்த கலை இயக்குநர் - மோகன்தாஸ் (2018)

  • சிறந்த பின்னணி பாடகி (பெண்) - ஆன் ஆமி (திங்கள் பூவில் - பாச்சுவும் அல்புத விளக்கும்)

  • சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) – வித்யாதரன் மாஸ்டர் (ஜனனம் 1947, பிரணயம் தொடருன்னு)

  • சிறந்த எடிட்டிங் - சங்கீத் பிரதாப் (லிட்டில் மிஸ் ராவுத்தர்)

  • சிறந்த பின்னணி இசை - மேத்யூஸ் புலிக்கல் (காதல் - தி கோர்)

  • சிறந்த பாடல்கள் - ஜஸ்டின் வர்கீஸ் (சாவர்)

  • சிறந்த பாடல் வரிகள் - ஹரிஷ் மோகனன் (செந்தாமர பூவில் - சாவேர்)

  • சிறந்த திரைக்கதை தழுவல் - பிளெஸ்ஸி (ஆடுஜீவிதம்)

  • சிறந்த திரைக்கதை - ரோஹித் எம்ஜி கிருஷ்ணன் (இரட்டா)

  • சிறந்த ஒளிப்பதிவு - சுனில் கே எஸ் (ஆடுஜீவிதம்)

  • சிறந்த கதை - காதல் தி கோர்

  • சிறந்த குழந்தை நடிகர் (பெண்) - தென்னல் அபிலாஷ் - சேஷம் மைக்கேல் பாத்திமா

  • சிறந்த குழந்தை நடிகர் (ஆண்) – அவிர்த் மேனன் – பாச்சுவும் அத்புத விளக்கும்

  • சிறந்த குணச்சித்திர கலைஞர் (பெண்) - ஸ்ரீஷ்மா சந்திரன் (பொம்பளை உரிமை)

  • சிறந்த குணச்சித்திர கலைஞர் (ஆண்) - விஜயராகவன் (பூக்காளம்)