சினிமா

கோவாவில் இன்று தொடங்குகிறது 52வது சர்வதேச இந்திய திரைப்பட விழா

கோவாவில் இன்று தொடங்குகிறது 52வது சர்வதேச இந்திய திரைப்பட விழா

நிவேதா ஜெகராஜா

52ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் இன்று கோவாவில் தொடங்கி வைக்கிறார். இந்த தொடக்க விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

வரும் 28ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த விழாவில் ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. விழாவில், ஹாலிவுட் திரைப்பட இயக்குநர்களான இஸ்த்வான் சாபோ மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸி ஆகியோருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட உள்ளது. போலவே ஹேமாமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகியோருக்கும் இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படுகிறது. இத்திரைப்பட விழாவில், தமிழில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' படம் திரையிடப்படுகிறது. குறும்படங்களின் பட்டியலில் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய 'ஸ்வீட் பிரியாணி' இடம்பெற்றுள்ளது.