இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, ஆனந்த விகடன் வார இதழின் பிரஸ்மீட் பகுதிக்கு பேட்டி அளித்துள்ளார். "அப்பா உங்ககூட பகிர்ந்துகிட்ட அனுபவங்கள், பண்ணின அறிவுரைகளில் உங்களால மறக்கமுடியாதது எது?" என்ற கேள்விக்கு அளித்த பதிலில், "பாடல்களில் எதிர்மறை வார்த்தைகள் வேணாம்" என்று இளையராஜா கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
“அப்பா இதுவரைக்கும் இப்படிப் பண்ணு அப்படிப் பண்ணுன்னெல்லாம் சொன்னதே இல்ல. நான் என்னெலாம் படம் பண்ணுறேன்னுகூட அவருக்குத் தெரியாது. ஒரே ஒரு தடவை ஒரு பாட்டு அம்மாவுக்குப் போட்டுக் காட்டுறப்போ அப்பாவும் கேட்டார். அந்தப் பாட்டுல ‘உனக்காக சாகிறேன்’ சாயல்ல சில வார்த்தைகள் வரும். ‘பாடல்களில் எதிர்மறை வார்த்தைகள் வேணாம். அந்த நெகட்டிவ் எனர்ஜி பாடுறவங்களையும் தொத்திக்கும். முடிஞ்ச அளவுக்கு தவிர்க்கலாம்’னு சொன்னார். அந்த ஒரு அறிவுரைதான் அவர் எனக்குக் கொடுத்தது" என்று யுவன்சங்கர்ராஜா நினைவுகூர்ந்துள்ளார்.