சிகப்பும் நீலமும் ஒன்றிணைய வேண்டியது இன்றைய தேவை என்று திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் 2 வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துக் கொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது, மார்க்சியத்திற்கு எதிராக அம்பேத்கரை நிறுத்துவது தொடர்ந்து விவாதத்திற்கு இருந்து வருகிறது என்றும், அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலைக்கு அம்பேத்கரும், மார்க்சியமும் இணைந்தால் தான், சாதி ஒழிப்பு சாத்தியம் என்று அவர் கூறினார். அதாவது சிகப்பும், நீலமும் ஒன்றிய வேண்டியது இன்றைய தேவை எனவும் பா.இரஞ்சித் தெரிவித்தார். இந்த மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்று உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.