சினிமா

‘பத்மாவத்’ படத்தை அடுத்து மணிகார்னிகாவுக்கு எச்சரிக்கை

‘பத்மாவத்’ படத்தை அடுத்து மணிகார்னிகாவுக்கு எச்சரிக்கை

webteam

தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான வரலாற்று படம் ‘பத்மாவத்’. இப்படம் வெளிவரும் முன் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதே போன்ற நிலை தற்பொழுது மணிகார்னிகா படத்திற்கும் நிகழ்ந்துள்ளது. 

இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வரும் பாலிவுட் திரைப்படம் மணிகர்னிகா. வீரப் பெண்மணியாக நிகழ்ந்து நாட்டு விடுதலைக்காக போராடிய ஜன்சி ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படமாகும். கங்கனா ரனாவத் மணிகார்னிகாவாக நடித்து வருகிறார். 

இதில் ராணி லட்சுமிபாய்க்கும் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரிட்டிஷ் ஏஜென்ட் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்படுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக சர்வ பிராமண மகாசபா என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயினிடம் விளக்கம் கேட்டு சர்வ பிராமண மகாசபா தலைவர் சுரேஷ் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர் பதில் அளிக்கவே இல்லை என்று சுரேஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

ராணி லட்சுமிபாயின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால்‘பத்மாவத்’படத்துக்கு நேர்ந்த கதி மணிகர்னிகாவுக்கு ஏற்படும் என சுரேஷ் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தயாரிப்பாளர் கூறுகையில், ராணி லட்சுமி பாயை மரியாதையான முறையில் காண்பித்துள்ளோம். படத்தில் எந்தக் காதல் காட்சியும் கிடையாது என்கிறார்.