சினிமா

கொடியன்குளம் கலவரம் தகவல் பிழையை சரிசெய்வதாக 'கர்ணன்' படக்குழு உறுதி - உதயநிதி ஸ்டாலின்

கொடியன்குளம் கலவரம் தகவல் பிழையை சரிசெய்வதாக 'கர்ணன்' படக்குழு உறுதி - உதயநிதி ஸ்டாலின்

sharpana

”அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ’கர்ணன்’ படத்தில் அச்சம்பவம் 1997-ல் திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளதை இரண்டு நாட்களில் சரி செய்துவிடுவதாக தயாரிப்பாளரும் இயக்குநரும் கூறியுள்ளனர்” என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கர்ணன்’ படம் கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சம்பவம் 1997 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் நடப்பதுபோல் காட்டப்பட்டுள்ளதாக படம் பார்த்தவர்கள் தொடர்ச்சியாக விமர்சனம் வைத்து வந்தார்கள்.

இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். ’அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.