சினிமா

“சர்வதேச அரசியல் படத்தில் உள்ளது” - ‘குண்டு’ குறித்து நடிகர் தினேஷ்

“சர்வதேச அரசியல் படத்தில் உள்ளது” - ‘குண்டு’ குறித்து நடிகர் தினேஷ்

webteam

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

‘அட்டகத்தி’ மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ். அந்தப் படம் இவருக்கு சிறப்பான அடையாளத்தை வழங்கியது. அடுத்து ‘குக்கூ’, ‘விசாரணை’,‘திருடன் போலீஸ்’ ‘அண்ணனுக்கு ஜே’ போன்ற படங்கள் மூலம் முக்கிய இடத்தை இவர் பிடித்தார். 

கதையின் தன்மைக்கேற்ப ஈடுபாட்டுடன் நடித்து, இயக்குநர்களின் நடிகராக தினேஷ் வலம் வருகிறார் தினேஷ். இந்த வரிசையில் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில், ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. 

“குண்டு படத்தை உலகின் எந்த ஊரோடும் தொடர்பு படுத்தி பார்க்கலாம். அப்படி எந்த நிலத்துடன் இணைத்து பார்த்தாலும் இது பொருந்திப்போகும். ஒரு சர்வதேச அரசியல் இந்தப் படத்தில் உள்ளது. அதேசமயம் ஜனரஞ்சகமான இருக்கும். என் சினிமா வாழ்வில் இது ரொம்ப முக்கியமான படம். வடதமிழ்நாட்டு லாரி டிரைவராக நடித்தது ஒரு புதிய அனுபவம்” என்கிறார் தினேஷ்.