ட்விட்டரில் நடிகர் விக்ரம் தன் பெயரில் வலம் வரும் ட்விட்டர் கணக்கு தன்னுடையதல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் திரை நட்சத்திரங்கள் பலர் மும்முரமாக இயங்கி வருகின்றனர். கமல்ஹாசன் ஒருபடி முன்னே சென்று ட்விட்டரில் அரசியலையே நடத்திக் கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து ரஜினியும் ட்விட்டரில் கணக்கு தொடங்கினார். இந்நிலையில் நடிகர் ‘சீயான்’ விக்ரம் பெயரில் அதிகாரப்பூர்வமானது எனக் கூறி ஒரு போலி கணக்கு செயல்பட்டு வந்தது. அந்தக் கணக்கு தன்னுடையதல்ல; போலியானது என விக்ரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்ஸ்டாகிராமில் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் விக்ரம் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடித்து வருகிறார். அதனை இயக்குநர் ஹரி இயக்கி வருகிறார். இந்தப் படம் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளார்.