வணிகம்

யமஹா ’ஏரோக்ஸ் மேக்ஸி 2022’ மாடல் ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகம்

யமஹா ’ஏரோக்ஸ் மேக்ஸி 2022’ மாடல் ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகம்

EllusamyKarthik

ஜப்பான் நாட்டின் மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான யமஹா நிறுவனத்தின் ஏரோக்ஸ் மேக்ஸி 2022 மாடல் ஸ்கூட்டர்  சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த செப்டம்பர் வாக்கில் ஏரோக்ஸ் ஸ்கூட்டர் அறிமுகமாகி இருந்தது. தொடர்ந்து கடந்த டிசம்பரில் மேலும் சில கலர் ஆப்ஷன்களில் ஏரோக்ஸ் விற்பனைக்கு வந்திருந்தது. இந்த நிலையில், ஏரோக்ஸ் மேக்ஸி 2022 மாடல் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டர் இந்தோனேசிய நாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பாதியில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 

மெக்கானிக்கல் ரீதியாக இந்த புதிய மாடலில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. மாறாக சில கலர் ஆப்ஷன்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன. 

155 சிசி லிக்விட் கூல்ட் என்ஜின், பின்பக்கத்தில் இரண்டு ஷாக் அப்சார்பர்ஸ், முன்பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக், பின்பக்கத்தில் டிரம் பிரேக், LCD யூனிட், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மாதிரியான அம்சங்கள் இந்த வாகனத்தில் உள்ளது.