வணிகம்

உலகின் டாப் 250 எரிசக்தி நிறுவனங்கள்: ரிலையன்ஸ் எந்த இடம் தெரியுமா?

உலகின் டாப் 250 எரிசக்தி நிறுவனங்கள்: ரிலையன்ஸ் எந்த இடம் தெரியுமா?

webteam

உலகின் டாப் 250 எரிசக்தி நிறுவனங்களில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது.

2017ஆம் ஆண்டிற்கான டாப் 250 நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை க்ளோபல் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனம், இந்தாண்டில் 5 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு 14வது இடத்தில் இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 7 இடத்திற்கும், 20வது இடத்தில் இருந்த ஓ.என்.ஜி.சி 11வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

அத்துடன் இந்திய நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் 27வது இடத்திற்கும், பவர் க்ரிட் நிறுவனம் 81வது இடத்திற்கும், கெய்ல் இந்தியா நிறுவனம் 106வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன. இந்துஸ்த்தான் பெட்ரோலியம் கடந்த ஆண்டு இருந்த 48வது இடத்தையே இந்த ஆண்டும் தக்கவைத்துள்ளது. ரிலையன்ஸ் இன்ஃராஸ்ட்ரக்ஜர் நிறுவனம் 185ல் இருந்து 162க்கும், டாடா பவர் 221ல் இருந்து 217க்கு முன்னேற்றம் அடைந்துள்ளன. இந்திய நிறுவனங்களில் கோல் இந்தியா 38 இடத்திலிருந்து 45 இடத்திற்கும், ஆயில் இந்தியா 201ல் இருந்து 232க்கும், ரிலையன்ஸ் பவர் 247ல் இருந்து 249க்கும் பின்னடைவு அடைந்துள்ளன. இவ்வாறாக உலகின் டாப் 250 எரிசக்தி நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் 14 இடங்களை நிரப்பியுள்ளது. இந்தப் பட்டியலில் ரஷ்யாவை சேர்ந்த கேஸ்ப்ரோம் நிறுவனம் 3வது இடத்திலிருந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 114வது இடத்திலிருந்த ஜெர்மனியை சேர்ந்த இ.ஆன் நிறுவனம் இந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது.