Bucket Plan Bucket Plan
வணிகம்

BUCKET PLAN | பக்கெட் பிரியாணி தெரியும், அதென்ன நிதி திட்டமிடலில் "பக்கெட் பிளான்"

கடன் அட்டையை (credit card) emergency செலவுகளுக்காக உபயோகிக்கப்பதை தவிர்க்கவும்.

த. பிரபாகரன்

நம்மில் பெரும்பாலானோர் ஓய்வு கால பாதுகாப்பிற்காகவும், குழந்தைகள் படிப்பு & திருமணம் போன்ற நீண்ட கால சேமிப்பிற்காகவும் தங்கம், FD, பங்குச்சந்தை & ரியல் எஸ்டேட் என ஏதோ ஒரு முதலீட்டை செய்கிறோம். ஆனால் இந்த முதலீடுகளில் சிலவற்றை நாம் தொடர முடிவதில்லை, சில சமயம் பணத்தை அவசர தேவைக்காக இவற்றில் இருந்து எடுத்து விடுகிறோம். இதனால் கடைசியில் எதற்காக ஆரம்பித்தோமோ அதை செய்ய இயலாமல் போய் விடுகிறது. 

இது போல் உங்கள் சேமிப்பு & முதலீடு தங்கு தடையில்லாமல் கடைசி வரை தொடர உதவுவதுதான் “பக்கெட் பிளான்”. இந்த முயற்சியை தொடங்குவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது சில உள்ளது. 

நிதி அடித்தளம்

பட்ஜெட் செய்யுங்கள் : முதலில் உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய (Cashflow) தெளிவான புரிதல் வேண்டும். உங்கள் செலவினங்களைக் கண்காணிக்கவும், நீங்கள் சேமிக்கக்கூடிய பகுதிகளைக் கண்டறியவும் விரிவான பட்ஜெட்டை உருவாக்கவும். இவ்வாறு செய்யும் போது சில செலவுகள் ஆண்டுக்கு சில முறையோ அல்லது ஒரு முறையோ வரலாம், அதையும் நீங்கள் எழுதி கணக்கு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு: RO வாட்டர் மெசின் ஆண்டுக்கு ஒரு முறை ரிப்பேர் செய்ய ஒரு ரூ. 4000 செலவாகும் என்று வைத்து கொள்ளுங்கள், இப்போது அந்த தொகையை மாதத்திற்கு (தோராயமாக ரூ. 350) என்று மாற்றி மாத செலவில் கணக்கு செய்யுங்கள். ஆண்டுக்கு சில முறை புது துணி வாங்குவோம் என்று வைத்து கொள்ளுங்கள் அவை அனைத்தையும் மாதத்திற்கு என்று மாற்றி கணக்கிடுங்கள். இவ்வாறு கணக்கிடும் போது கைக்கு வரும் வருமானத்தில் உங்களின் சேமிக்கும் அளவு & கடன் அளவு என்ன என்பது தெரிந்து விடும்.

கடன் மேலாண்மை: கிரெடிட் கார்டு கடன் போன்ற அதிக வட்டி கொண்ட கடனை செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள். இது சேமிப்பிற்கும் முதலீடு செய்வதற்கும் அதிக பணத்தை விடுவிக்கும்.  

அவசர நிதி (Emergency fund): மருத்துவக் கட்டணங்கள், வேலை இழப்பு அல்லது கார் பழுதுபார்ப்பு போன்ற எதிர்பாராத செலவுகளை ஈடுகட்ட கணிசமான அவசர நிதியை நிறுவவும். இது நம் கைக்கு வரும் மாத வருமானத்தில், 3 மடங்கில் இருக்க வேண்டும். இதை நீங்கள் எளிதில் எடுக்கும் வகையான ஒன்றில் வைக்க வேண்டும். வீட்டில் பணமாகவோ, வங்கியில் , அல்லது ஒரே நாளில் பணம் நம் வாங்கி கணக்கிற்கு வரக்கூடிய liquid funds & FD முதலானவற்றில் வைக்க வேண்டும். இதில் பெரிய returns வராது. அதற்காக இந்த அவசர நிதியை சேமிக்காமல் இருக்க கூடாது. கடன் அட்டையை (credit card) emergency செலவுகளுக்காக உபயோகிக்கப்பதை தவிர்க்கவும். 

காப்பீடு (Insurance) :

Term Insurance & Health Insurance: பக்கெட் பிளான் தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டியது காப்பீடு. இது உங்கள் வாழ்க்கை முறையையும், உங்கள் வருமானத்தை நம்பி உள்ளவர்களையும் பொறுத்து செய்ய வேண்டியது. 

எவ்வளவுக்கு எடுக்கலாம்?

Term Insurance : 

எடுக்க வேண்டிய அளவு = 10 மடங்கு * ஆண்டு வருமானம் (பிடித்தம் போக கையில் வாங்குவது) + பெரிய சுமை (குழந்தை கல்யாணம், படிப்பு)

உதாரணத்திற்கு ரூ. 50000 மாத சம்பளம் வாங்கும் ஒருத்தர் எடுக்க வேண்டிய அளவு… 

ரூ. 6,00,000 (ஆண்டு வருமானம்) X 10 + ரூ. 30,00,000 (குழந்தை படிப்பு என வைத்து கொண்டால்) = ரூ 90,00,000 கவரேஜ். 

Health Insurance: 

சென்னையில் ஒருவர் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு அறை வாடகை ரூ. 6,000-8,000 கொடுத்து சிகிச்சை எடுத்து கொள்கிறார் என வைத்து கொள்வோம். அவருக்கு, அறை வாடகையின் குறைந்தபட்சம் 100 மடங்கு கவர் தேவைப்படும்.

இது நமக்கு தேவையான குறைந்தபட்ச காப்பீடு மட்டுமே. எனவே இவருக்கு , குறைந்தபட்ச காப்பீடு 8,000 x 100 = ரூ.8 லட்சம். இருப்பினும், அறை வாடகையில் 150மடங்கில் மற்றும் 200 மடங்கில் காப்பீடு எடுப்பது நல்லது . அதாவது சிறந்த மருத்துவக் காப்பீடு ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை இருக்கும் . இதுவே அவர் இலக்காகக் கொள்ள வேண்டிய சிறந்த கவரேஜ் வரம்பாகும். 

இதெயெல்லாம் செய்து முடித்த பின்பு தான், நாம் செய்ய வேண்டியது பக்கெட் பிளான். அது குறித்து அடுத்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.