வணிகம்

இந்திய ரூபாய் நோட்டுகள் எதன் அடிப்படையில் அச்சடிக்கபடுகின்றன தெரியுமா?

இந்திய ரூபாய் நோட்டுகள் எதன் அடிப்படையில் அச்சடிக்கபடுகின்றன தெரியுமா?

PT WEB

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் எந்த கணக்கீட்டின் அடிப்படையில் அச்சடிக்கப் படுகின்றன. மதிப்புகள் எப்படி நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் ஒட்டுமொத்த பண நிர்வாகத்தையும் ரிசர்வ் வங்கியே கவனித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934இன் படி, பண நிர்வாகப் பணியை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்கிறது ரிசர்வ் வங்கி. எவ்வளவு நோட்டுகள், எவ்வளவு மதிப்பில், எவ்வளவு எண்ணிக்கையில் அச்சிடப்பட வேண்டும் என்பதெல்லாம் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு முடிவு செய்யப்படுகிறது. பழைய நோட்டுகளை அகற்றுதல், மாற்றீடு செய்யும் தேவை, இருப்புத் தேவை உள்ளிடவற்றை பொறுத்து ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சி விகிதம் உள்ளிட்டவற்றை புள்ளியியல் முறையில் கணக்கிட்டு பணத்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன. மேலும் கருப்புப் பணம், கள்ள நோட்டுப் புழக்கத்தைத் தடுக்க புதிய நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. நாட்டின் உற்பத்தி விகிதத்தை அடிப்படையாக வைத்து ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் கணக்கு நிர்ணயிக்கப்படுகிறது. கோல்ட் ஸ்டாண்டர்ட் சிஸ்டம் எனும் முறையில் பணவீக்கம் ஏற்படாதவாறு, பணத்தை புழக்கத்தில் விடுவது ரிசர்வ் வங்கியின் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.