தூத்துக்குடியில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து ஆலை மூடப்பட்டு சீல் வைக்கபப்ட்டது. இந்நிலையில் ஆலையில் இருந்து திடீரென சல்பியூரிக் அமிலக் கசிவு இருப்பதாக புகார் எழுந்தது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்களின் புகாரை அடுத்து அமிலத்தை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதுவரை 2000 லிட்டர் அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது
இந்நிலையில் ஆலையில் ஏற்பட்ட அமிலக் கசிவு மும்பை பங்குச் சந்தை வேதாந்தா நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலளித்த வேதாந்தா நிறுவனம், மே மாதம் 28-ம் தேதியில் இருந்து தங்களுக்கு ஆலைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாகவும், ஆலையில் அமிலக் கசிவு ஏற்பட்டதாக தகவல் கிடைத்த உடன் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறியதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் உரிய பராமரிப்பு இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.