வணிகம்

ஊரடங்கு நிலை : பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் அதிரடி ஆஃபர்

ஊரடங்கு நிலை : பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வோடாஃபோன் அதிரடி ஆஃபர்

webteam

குறைந்த வருமானம் ஈட்டும் வாடிக்கையாளர்களின் பிரிபெய்டு பிளான் வெலிடிட்டி நீட்டிப்பு செய்யப்படுவதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அத்துடன் வெளிமாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு பணிக்காக சென்றோரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பினை மத்திய, மாநில அரசுகள் முடிந்த வரை வழங்கி வருகின்றன.

இவ்வாறு சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு தங்கள் செல்போன் தான். குடும்பத்தினருடன் பேசுவதற்கும், நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கும் செல்போன் தான் உதவுகின்றன. மாதத் கடைசி என்பதால் பலரது செல்போனின் பிரிபெய்டு பேக்கேஜ்களும் முடிவடையும் தருணம் இது. ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் தங்களது மொபைல் மூலமே ரிசார்ஜ் செய்து கொள்வார்கள். ஆனால் பேசிக் ஆப்ஷன்ஸ் மட்டும் இருக்கும் குறைந்த விலையிலான ஃப்யூஜர் போன் (feature phone) வாடிக்கையாளர்கள் ரிசார்ஜ் செய்துகொள்ளவது கடினம். கடைகளும் திறந்திருக்காது.

இந்த நிலையை உணர்ந்து கொண்டு தற்போது அனைத்து சிம் நிறுவனங்களும் ஃப்யூஜர் போன் (feature phone) வைத்திருக்கும் பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் பேக்கெஜ் கால அவகாசத்தை நீட்டித்துள்ளன. ஏர்டெல் நிறுவனம் தங்கள் பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 8 கோடி பேரின் பேக்கேஜ் கால அவகாசத்தை ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு செய்துள்ளது. அத்துடன் கூடுதலாக ரூ.10ஐ அவர்களின் பிரிபெய்டு கணக்கில் செலுத்தியுள்ளது. இதேபோன்று பிஎஸ்என்எல் நிறுவனம் தங்கள் பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் பேக்கெஜ் கால அவகாசத்தை ஏப்ரல் 20 வரை நீட்டித்ததுடன், ரூ.10 ரிசார்ஜ் தொகையும் வழங்கியிருக்கிறது.

இந்நிலையில், வோடாஃபோன் ஐடியா நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகையை அறிவித்துள்ளது. வருமானம் குறைந்த வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஃப்யூஜர் போன் வைத்திருக்கும் 10 கோடி பிரிபெய்டு வாடிக்கையாளர்களின் பேக்கேஜ் கால அவகாசத்தை ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது. மேலும் ரூ.10 ரிசார்ஜ் தொகையும் வழங்கவுள்ளது.

இதுதொடர்பாக வோடாஃபோன் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், “ரூ.10 விரைவில் வாடிக்கையாளர்களுக்கு ரிசார்ஜ் ஆகும். இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் போனில் பேசமுடியாமல் எப்போதும் கவலைப்படக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.