வணிகம்

வோடஃபோன் நிறுவனத்திற்கு ரூ.7,900 கோடி அபராதம்

வோடஃபோன் நிறுவனத்திற்கு ரூ.7,900 கோடி அபராதம்

webteam

வரி பாக்கி வைத்துள்ள வோடஃபோன் தொலைபேசி நிறுவனத்துக்கு 7,900 கோடி ரூபாயை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளது.

ஹட்சிசன் நிறுவனத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கியதில் வரி பாக்கியைச் செலுத்தத் தவறியதாக வோடஃபோன் மீது மத்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற ரூ.16,430 கோடி மூலதன லாபம் மீது ரூ.7,900 கோடி வரி விதித்து அதற்கான நோட்டீஸை வருமான வரித்துறை ஜனவரி 25-ம் தேதி அனுப்பியது. 

தற்போது சிக் ஹட்சிசன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஹட்சிசன் வாம்ப்பா நிறுவனத்திடமிருந்து வோடபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு 67% பங்குகளை வாங்கியது. இதன் மூலதன லாபம் மீது முந்தைய காலக்கட்டத்தையும் இணைத்து வருமான வரித்துறை வரி விதிப்பு செய்துள்ளது.