ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் எக்ஸ் தளம்
வணிகம்

சரியும் பங்குச்சந்தை... டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி உள்ளது?

தொடர்ந்து சரிந்து வரும் இந்திய பங்குச்சந்தை காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரியளவில் மாற்றம் ஏதும் ஏற்படாமல் உள்ளது. இன்றைய பங்குச்சந்தை நிலவரம் காணலாம்.

Jayashree A

தொடர்ந்து சரிந்து வரும் இந்திய பங்குச்சந்தை காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரியளவில் மாற்றம் ஏதும் ஏற்படாமல் உள்ளது. இன்றைய பங்குச்சந்தை நிலவரம் காணலாம்.

இந்திய தேசிய பங்குச் சந்தையானது 23,542 புள்ளிகளில் தொடங்கி 34 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதே போல் மும்பை பங்குச்சந்தையானது 77,636 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி 150 புள்ளிகள் சரிவில் வர்த்தகம் நடந்து வருகிறது.

நிஃப்டியில் பிபிசிஎல், ஐடிசி, அதானி போர்ட்ஸ், எச்யுஎல் மற்றும் டாடா போன்ற பங்குகள் சரிவை சந்தித்தன.

பங்கு சந்தை

ஈச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் லாபம் ஈட்டுகின்றன.

துறைகளில், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் எஃப்எம்சிஜி 0.5-1 சதவிகிதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஆட்டோ, ஹீத்கேர், ரியல் எஸ்டேட், மீடியா 0.5-1.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

கனடாவின் EDC உடனான ரூ.763 கோடி சர்ச்சையைத் தீர்த்து 13 Q400 விமானங்களின் உரிமையைப் பெற்ற பிறகு SpiceJet பங்குகள் 3% உயர்ந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 84.410 என வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதுடன், அமெரிக்க அரசாங்கத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து அந்நிய முதலீட்டாளார்கள் இந்திய பங்குச் சந்தைகளில் தங்களுடைய பங்குகளை கடந்த சில நாட்களாக விற்று வருகின்றனர். மேலும் தங்கத்தின் மீதான தங்களது முதலீட்டை தொடர்ந்து குறைத்து வருவதால், தங்கத்தின் மீதான விலை சரிவும், பங்குச் சந்தை சரிவும் ஒருசேர நடந்து வருகிறது.