வணிகம்

வர்த்தகப் பற்றாக்குறை முன் எப்போதும் இல்லாத உயர்வு

வர்த்தகப் பற்றாக்குறை முன் எப்போதும் இல்லாத உயர்வு

Sinekadhara

ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டி கவலைக்குரிய அம்சமாக மாறியுள்ளது.

நாட்டின் ஏற்றுமதி கடந்த செப்டம்பரில் 22 புள்ளி 63 சதவிகிதம் அதிகரித்து 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதேநேரம், இறக்குமதி 84 புள்ளி 77 சதவிகிதம் உயர்ந்து 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பரில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி வெகுவாக அதிகரித்ததையடுத்து நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு வர்த்தக பற்றாக்குறையானது கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.