வணிகம்

கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் இந்தியாவுக்கு எத்தனாவது இடம்?.. முதலிடத்தில் உக்ரைன்!

கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் இந்தியாவுக்கு எத்தனாவது இடம்?.. முதலிடத்தில் உக்ரைன்!

JustinDurai

ஐநா அறிக்கையின்படி இந்திய மக்களின் வசம் 7.3% கிரிப்டோகரன்சி உள்ளது.

டிஜிட்டல் கரன்சிகள் எனப்படும் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் சமீபத்திய வருடங்களாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கிரிப்டோகரன்சி வைத்துள்ள நாடுகள் குறித்து, ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, டிஜிட்டல் கரன்சிகளை வைத்திருக்கும் மக்கள் பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மக்களின் வசம் 12.7% கிரிப்டோகரன்சி இருக்கிறது. ரஷ்யாவில் 11.9 சதவீதமும், வெனிசுலாவில் 10.3 சதவீதமும், சிங்கப்பூரில் 9.4 சதவீத மக்களும் கிரிப்டோகரன்சி வைத்துள்ளனர். அமெரிக்காவில், 8.3 சதவீத மக்கள் கிரிப்டோகரன்சி வைத்துள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 7.3 சதவீதம் பேர் கிரிப்டோகரன்சி வைத்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு இந்த கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகைகளை மீண்டும் அமல்படுத்துக”- ரயில்வே நிலைக்குழு