வணிகம்

'தலைமை நிர்வாகிகளில் 25% சிறுபான்மையினர்!' - ட்விட்டர் நிறுவனம் கொடுத்த உறுதி

'தலைமை நிர்வாகிகளில் 25% சிறுபான்மையினர்!' - ட்விட்டர் நிறுவனம் கொடுத்த உறுதி

webteam

2025-க்குள் தமது நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளில் 25% சிறுபான்மையினர், பெண்களாக இருப்பார்கள் என்று ட்விட்டர் உறுதியளித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் தனது தலைமைப் பணிகளில் பன்முகத்தன்மை கொண்டவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், பன்முகத்தன்மை அதிகரிக்கப்படும் என்றும் வியாழக்கிழமை உறுதியளித்தது. அதன்படி, 2025-க்குள் தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளில் குறைந்தபட்சம் 25% பேர் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் நிச்சயம் பிரதிநிதித்துவப்படுவார்கள் என்று கூறியிருக்கிறது. ட்விட்டர் நிறுவனம் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் உள்ள நிறுவனங்களிடையே பன்முகத்தன்மையை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக இந்த புதிய இலக்கை அறிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் சமீபத்திய உள்ளார்ந்த மற்றும் பன்முகத்தன்மை (Inclusion and diversity) அறிக்கையின்படி, ட்விட்டரின் தற்போதைய தலைமை ஊழியர்களாக பணிபுரிபவர்களின் சுமார் 13% பேர் கருப்பினத்தவர்கள், லத்தீன், வெளிநாடு அல்லது பன்முக சமூகத்தச் சேர்ந்தவர்கள்.

அதேபோல், நிறுவனத்தின் உலகளாவிய தலைமைப் தலைமைப் பதவிகளில் 38.2% பேர் பெண்கள் உள்ளனர் என்று அதே அறிக்கை கூறுகிறது. இதனை, குறைந்தது 41% பெண்களைக் கொண்டிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் உறுதி அளித்துள்ளது.

மேலும், தனது அமெரிக்க நிர்வாகிகளில் குறைந்தது 25% சிறுபான்மையினரைக் கொண்டிருக்கவும் உறுதி அளித்துள்ளது. அப்படி நடந்தால் கறுப்பினத்தவர்கள், லத்தீன், பூர்வீக அமெரிக்கன், அலாஸ்கன் அல்லது ஹவாய் / பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் ட்விட்டர் தலைமைப் பொறுப்பை அலங்கரிப்பர். விரைவில் இதை நடைமுறைப்படுத்தப்படும் என்று ட்விட்டர் அறிவித்துள்ள தகவல் சற்று மகிழ்ச்சியை தருகிறது.