வணிகம்

டிராய் புதிய உத்தரவு: செல்ஃபோன் கட்டணங்கள் குறைய வாய்ப்பு

டிராய் புதிய உத்தரவு: செல்ஃபோன் கட்டணங்கள் குறைய வாய்ப்பு

Rasus

செல்ஃபோன் சேவை நிறுவனங்களுக்கான, டெர்மினேஷன் சார்ஜ் எனப்படும் அழைப்பு முடிவு கட்டணம் நிமிடத்துக்கு 6 காசாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன் வாடிக்கையாளரின் அழைப்பு கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு செல்ஃபோன் சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர், மற்றொரு நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு அழைக்கும் போது அந்நிறுவனத்துக்கு முதல் நிறுவனம் தர வேண்டிய கட்டணமே அழைப்பு முடிவு கட்டணமாகும். இது 14 காசிலிருந்து 6 காசாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு அடுத்த மாதம் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதன் மூலம் நுகர்வோருக்கான கட்டணமும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அழைப்பு முடிவு கட்டணத்தை உயர்த்த ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு மாறாக நுகர்வோருக்கு சாதகமாக அக்கட்டணங்களை டிராய் குறைத்துள்ளது. 2020-ம் ஆண்டு இக்கட்டணத்தை முற்றிலும் ஒழிக்க டிராய் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.