வணிகம்

எட்டு லட்சம் ரூபாயில் புதிய டொயோட்டா கார்

எட்டு லட்சம் ரூபாயில் புதிய டொயோட்டா கார்

webteam

ஜப்பான் நிறுவனம் டொயோட்டா பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கிளான்சா மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.7.22 லட்சம் முதல் ரூ.8.9 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஹுகியின் பலேனோ கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்சின்களிலும் விற்பனையில் உள்ளன. கார்களின் திறனுக்கு ஏற்ப பலேனோ கார்கள் ரூ.5.46 லட்சம் முதல் ரூ.8.9 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம், மாருதி சுஹுகியின் சில மாடல்களை ரீபேட்ஜ் செய்து வெளியிடமுடிவு செய்தது. அதன்படி இரு நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் போட்டன. அதன்படி தற்போது பலேனோ மாடலின் ரீபேட்ஜ் மாடலான டொயோட்டாவின் கிளான்சா மாடல் அறிமுகமாகியுள்ளது.

ஆட்டோ டச் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் செய்யும் தொழில் நுட்பங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுஹுகியின் பலேனோவை விட டொயோட்டாவின் கிளான்சா எதில் வேறுபடும் என்ற கேள்விக்கு பதிலளித்த டொயோட்டா நிறுவனம், அது வாடிக்கையாளர்கள் தான் சொல்ல வேண்டும். விற்பனைக்கு பிறகே அது தெரியவரும் என தெரிவித்துள்ளது. 

மேலும் 3 வருடம் அல்லது 1 லட்சம் கிமீ என்ற வாரண்டி தற்போது 5 வருடம் அல்லது 2.2லட்சம் கிமீ என அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சுஹுகியிடம் இருந்து பெறப்போகும் கார்களின் எண்ணிக்கை நிர்ணயம் இல்லை என்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அது நிர்ணயம் செய்யப்படும் என்றும் டொயோட்டா தெரிவித்துள்ளது.

ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ் பிரேக்கிங் அமைப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கிளான்சா மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீலம், சாம்பல், வெள்ளை, சிவப்பு, மற்றும் சில்வர் என ஐந்துவிதமான நிறங்களில் டொயோட்டா க்ளான்ஸா கிடைக்கும் என்றும் கூறப்படுள்ளது.