நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வாடிக்கையாளர்களை மேலும் “வியர்க்க” வைக்கும் விதமாக ஏசியின் விலை அடுத்த மாதம் உயரப் போகிறது.
ரஷ்யா- உக்ரைன் இடையே நீடித்து வரும் போர் மற்றும் கொரோனா பரவல் காரணமாக சீனாவில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் இந்திய சந்தைகளில் எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்ந்து மூலப்பொருட்கள் தட்டுபாட்டை சந்தித்து வருகின்றது.
சர்வதேச அளவில் ஏற்கனவே நிலவும் உதிரி பாகங்களுக்கான தட்டுப்பாடு, விநியோக சங்கிலி பாதிப்பு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் ஏசியின் விலையை உயர்த்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வேறுவழியின்றி விலை ஏற்றத்தை வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள். எனவே, அடுத்த மாதம் முதல் ஏசிக்களின் விலை 3 முதல் 4 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.