நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது.
இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வசூலானதை விட 30 சதவிகிதம் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 9 மாதங்களாக, ஒரு லட்சம் கோடி இலக்கை கடந்து வந்த ஜிஎஸ்டி வசூல், கொரோனா 2-ம் அலைக்குப் பின்பு கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ஒரு லட்சம் கோடி இலக்கை கடந்தது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 35 சதவிகிதம் அதிகரித்து 7 ஆயிரத்து 60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.