வணிகம்

புத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு

புத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு

webteam

2019 ஜனவரி முதல் ரூ.40 ஆயிரம் வரை கார்களின் விலை உயர்த்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

2019 ஜனவரி முதல் கார்களில் மாடல்களுக்கு ஏற்ப ரூ.40 ஆயிரம் வரை விலையை உயர்த்த திட்டமிட்டப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உள்ளீட்டு செலவீனங்கள் அதிகரித்து வருவதாலும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதாலும் இந்த விலை உயர்வை அமல்படுத்த உள்ளதாகவும் டாடா மோட்டார் தெரிவித்துள்ளது.

விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள டாடா மோட்டார்சின் பயணிகளுக்கான வாகன வியாபார பிரிவின் தலைவர் மாயங்க் பரீக், சந்தை நிலவரங்களின் மாற்றங்கள், உள்ளீட்டு செலவீனங்களின் அதிகரிப்பு, மாறுபடும் பொருளாதார கொள்கைகளின் காரணிகள் ஆகியவற்றின் காரணமாகவே விலை உயர்வை அமல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.  

டையகோ, ஹெக்‌ஷா, டைகோர், நெக்சான் உள்ளிட்ட மாடல்களின் மூலம் எங்களது நிறுவனத்தின் நம்பிக்கையை நிலைநாட்ட முடியும் என்று நம்புகிறோம். முக்கியமாக நாங்கள் எஸ்யுவி மாடலான ஹாரியர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளோம். இது கார் பிரியர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மாருதி சுசூகி, டொயோட்டா, பி,எம்.டபள்யூ ஆகிய நிறுவனங்கள் ஏற்கெனவே ஜனவரி மாதம் முதல் தங்களது கார்கள் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளன.