வணிகம்

இந்த நிதியாண்டில் 80,000 மின்சார கார்களை உருவாக்க டாடா நிறுவனம் இலக்கு

இந்த நிதியாண்டில் 80,000 மின்சார கார்களை உருவாக்க டாடா நிறுவனம் இலக்கு

Veeramani

மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டில் சுமார் 80,000 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 19,000 மின்சார கார்களை உருவாக்கி விற்பனை செய்துள்ளது. மார்ச் 2026-க்குள் 10 மின்சார கார்களின் மாடல்களை அறிமுகப்படுத்துவதாக கடந்த ஆண்டு டாடா நிறுவனம் அறிவித்தது, இதற்காக புதிய வாகன கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீடும் செய்துள்ளது.



தற்போது இந்தியாவின் மின்சார கார்கள் விற்பனையில் 90% பங்கினை டாடா நிறுவனம் வகிக்கிறது. ஆனால், இது நாட்டில் கடந்த ஆண்டு விற்பனையான சுமார் 3 மில்லியன் வாகனங்களில் 1% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக நெக்ஸன் எஸ்யுவி மற்றும் இன்னொரு மாடலை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

2030-ஆம் ஆண்டுக்குள், மொத்த கார் விற்பனையில் 30% மின்சார கார் மாடல்களை உருவாக்க வேண்டும் என்று இந்தியா திட்டமிட்டுள்ளது.