வணிகம்

போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வெளியிடும் கார் நிறுவனங்கள் : நேற்று மாருதி! இன்று டாடா!

போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வெளியிடும் கார் நிறுவனங்கள் : நேற்று மாருதி! இன்று டாடா!

webteam

பொருளாதார மந்தநிலை காரணமாக கார்களின் விற்பனை வீழ்ச்சியால் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வெளியிட்டு வருகின்றன கார் நிறுவனங்கள். 

கடந்த நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை நிலவரத்தை பொருத்தவரை மாருதி கார் நிறுவனமே முதல் ஆறு இடங்களை பிடித்திருந்தது. ஆனால் தற்போது பொருளாதார மந்தநிலை காரணமாக கார்களின் விற்பனை மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் செப்டம்பர் 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் கார் உற்பத்தி நடைபெறாது என மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து பெஸ்ட் ஆஃபர்களையும் மாருதி நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில், மூன்று வகையாக ஆஃபர்களை வழங்குகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் ஆஃபர், எக்ஸேஞ் ஆஃபர், கார்பரேட் ஆஃபர் என வழங்குகிறது. 

இதில் 6 வகையான கார்களுக்கு இந்த ஆஃபர்களை வழங்குகிறது. மாருதி பலேனோ பெட்ரோல் கார்களை வாங்கும்போது ரூ. 35 ஆயிரம் வரையிலும் அதே டீசல் காருக்கு ரூ. 62,400 வரையிலும் ஆஃபர்களை வழங்குகிறது. இதேபோல், இக்னீஸ் காருக்கு ரூ. 57,000 வரையிலும் எஸ்.கிராஸ் காருக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 900 வரையிலும் ஆஃபர்களை வழங்குகிறது. சியாஸ் பெட்ரோல் காருக்கு ரூ. 65 ஆயிரம் வரையிலும் சியாஸ் டீசல் காருக்கு ரூ. 87,700 வரையிலும் ஆஃபர்களை வழங்குகிறது மாருதி கார் நிறுவனம். இத்தகைய ஆஃபர் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே எனத் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இன்று டாடா கார் நிறுவனம் கார்களின் விலையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை ஆஃபர்களை அறிவித்துள்ளது.  இதிலும் எக்ஸேஞ் ஆஃபர் வழங்குகிறது. ஹேக்ஸா கார் விலையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை ஆஃபர்களை பெற முடியும் என டாடா கார் நிறுவனம் அறிவித்துள்ளது. நிக்ஸான் கார் விலையில் ரூ. 87,500 வரையிலும் டாடா டைகர் கார் விலையில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் வரையிலும் ஆஃபர்களை வழங்குகிறது. டாடா டியாகோ காரின் விலையில் ரூ. 70 ஆயிரம் வரை ஆஃபர்களை வழங்குகிறது டாடா கார் நிறுவனம்.