தங்கம் புதியதலைமுறை
வணிகம்

இன்று பங்குச் சந்தை நிலவரம் என்ன? தங்கம் விலையில் தாக்கம் உள்ளதா?

Jayashree A

இன்று பங்குச் சந்தையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் தேசிய பங்குச் சந்தையானது நிப்டி 23,283.75 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி 23,330 புள்ளிகளில் வர்த்தகமானது நடைபெற்று வருகிறது.

அதேபோல் மும்பை பங்குசந்தையானது சென்செஸ் 76,680.90 புள்ளிகளில் ஆரம்பித்து 76,673 புள்ளிகளில் தொடர்ந்து வர்த்தகமானது நடந்து வருகிறது.

இண்டிகோவின் பங்குகள் 4% மேல் சரிவை கண்டு வருகிறது. இதேபோல் inter vlobe aviation பங்குகளும் சரிவை சந்தித்து வருகின்றன. அதே போல் பேங்க் நிஃப்டியானது 49,830 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது 50000 கடந்து நடைபெற்றால் 50,600 புள்ளிகள் வரை செல்லலாம் என்று கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை:

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.53,160க்கு விற்பனை ஆகி வருகிறது. அதாவது கிராம் ஒன்று ரூ.15 அதிகரித்து 6,645 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு!

வெள்ளியின் விலை

சென்னையில் வெள்ளியின் விலையானது ரூ1.20 இறக்கம் கண்டு கிராம் ஒன்றிஉ 95 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.