பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சோனி புதிய வாக்மேன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ஜப்பானிய நிறுவனமான சோனி பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக சோனி வெளியிட்ட இசை கேட்கும் கருவியான ‘வாக்மேன்’ உலக அளவில் பிரபலமானது. அத்துடன், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை சோனி நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘என்.டபிள்யூ ஏ105’ என்ற புதிய ரக வாக்மேன் ஒன்றை சோனி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
ஸ்மார்ட்போன் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்மேன், 3.6 இன்ச் டச் ஸ்கீரின் கொண்டது. அத்துடன் ஆண்ட்ராய்டு 9 பெய் இயங்குதளத்தில் இது செயல்படும். கறுப்பு நிறத்தில் மட்டும் இந்த வாக்மேன் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 26 மணி நேரம் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுள்ளது. அத்துடன் கூடுதலாக 128 ஜிபி ஸ்டோரேஜை சேர்த்துக்கொள்ள முடியும். மேலும், ஸ்டோரேஜ் தேவைப்படும் பட்சத்தில் கூகுள் டிரைவ் ஆஃப்ஷனை இதில் இணைக்கலாம். இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள இந்த வாக்மேனின் விலை ரூ.23,990 ஆகும்.