வணிகம்

கொரோனா காலத்திலும் கொடிநாட்டிய ஸ்நாப்ஷாட் நிறுவனர்கள் .. 2.7 பில்லியன் டாலர்கள் வருவாய்!

கொரோனா காலத்திலும் கொடிநாட்டிய ஸ்நாப்ஷாட் நிறுவனர்கள் .. 2.7 பில்லியன் டாலர்கள் வருவாய்!

webteam

கொரோனா காலத்தில் அதிகரித்த பயன்பாட்டால் ஸ்நாப்ஷாட் நிறுவனர்கள் 2.7 பில்லியன் டாலர் வருவாய் பெற்றனர்.

கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் பல்வேறு வீழ்ச்சிகளை சந்தித்த நிலையிலும், சில துறைகள் எதிர்பாராத வளர்ச்சி கண்டன. அதில் முக்கியமான ஒன்று சமூக வலைத்தளங்கள். அந்த வகையில் ஸ்நாப்ஷாட் நிறுவனமும் கடந்த காலாண்டில் பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. இதனால் அந்த நிறுவனத்திற்கு 2.7 பில்லியன் டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கிறது.

இந்தத் தொகை அதன் இணை நிறுவனர்களான ஈவன் ஸ்பைஜெல் மற்றும் பாப்பி முர்பி ஆகியோருக்கு முறையே 1.3 பில்லியன் டாலர் மற்றும் 1.4 பில்லியன் டாலர் என பகிரப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் மொத்த மதிப்பு முறையே 6.9 பில்லியன் டாலர் மற்றும் 7.2 பில்லியன் டாலர் என உயர்ந்திருக்கிறது.