இந்திய வாகன சந்தையில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யும் திட்டம் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது ஸ்கோடா நிறுவனம். ஆனால் அது இப்போதைக்கு இல்லை எனவும் அந்நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தை தங்கள் நிறுவனத்தின் சார்பாக அறிமுக செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கார்களை உற்பத்தி செய்து வரும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தையாவது சேர்த்துவிடும் நோக்கில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் ஸ்கோடா நிறுவனம் தங்களுக்கும் அந்த யோசனை உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் அது இப்போதைக்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அண்மையில் சர்வதேச சந்தையில் ஸ்கோடா Enyaq iV SUV ரக காரை அறிமுகம் செய்திருந்தது. இந்த கார் ஸ்கோடாவின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாகும்.
பொறுத்திருந்து இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரவேற்பை பார்த்து அதன்படி முடிவு எடுக்க உள்ளதாம் ஸ்கோடா. எப்படியும் 2025 - 26 வாக்கில் ஸ்கோடா எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுவரை பெட்ரோல், டீசல் வாகனங்களை தான் இந்திய சந்தையில் அந்நிறுவனம் விற்பனை செய்யுமாம்.