வணிகம்

பாகிஸ்தானில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கால் விபத்து: 19 சீக்கிய யாத்ரீகர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கால் விபத்து: 19 சீக்கிய யாத்ரீகர்கள் உயிரிழப்பு

jagadeesh

பாகிஸ்தானில் யாத்ரீகர்கள் சென்று கொண்டு இருந்த பேருந்தின் மீது ரயில் மோதியதில் 19 சீக்கியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்டத்தின் பரூக்காபாத் ரயில் நிலையம் அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது. நான்கானா சாஹிப் வழிப்பாட்டுத் தளத்தில் இருந்து லாகூர் வழியாக சீக்கிய யாத்ரிகர்கள் ஒரு பேருந்தில் வந்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடந்தபோது அவ்வழியாக லாகூர் சென்றுக்கொண்டிருந்த விரைவு ரயில் பேருந்தின் மீது மோதியது.

 இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 19 பேர் உயிரிழந்ததாகவும் 8 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீக்கியர்களின் புனித பயணத்துக்கு ஏதுவாக கர்த்தார்பூர் உள்ளிட்ட பல்வேறு சீக்கிய புனிதத் தளங்களை பாகிஸ்தான் அரசு ஜூன் 30 ஆம் தேதி மீண்டும் திறந்தது குறிப்பிடத்தக்கது.