வணிகம்

”கச்சா எண்ணெய், எரிவாயு வாங்க மாட்டோம்” - ரஷ்யாவிற்கு எதிராக ஷெல் அறிவிப்பு

”கச்சா எண்ணெய், எரிவாயு வாங்க மாட்டோம்” - ரஷ்யாவிற்கு எதிராக ஷெல் அறிவிப்பு

EllusamyKarthik

உக்ரைன் மீது படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்நிலையில், உலக நாடுகள் ரஷ்யாவுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. அதோடு சில நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் சேவையை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. அந்த வகையில், லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘ஷெல்’ ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

மேலும் கடந்த வாரம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஸ்விஸ் நாட்டு வரத்தக நிறுவனத்திடமிருந்து கடந்த வாரம் ஒரு பேரல் 28.50 அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்தமாக ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரஷ்யா உடனான தங்களது அனைத்து செயல்பாட்டில் இருந்தும் விலகுவதாக கடந்த வாரம் ஷெல் அறிவித்திருந்தது. மேலும் எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவுக்கு வேகமாக செயல்பட்டு தங்களது பெட்ரோல் பங்குகள், விமான எரிபொருள், லுப்ரிகன்ட் சார்ந்த இயக்கத்தையும் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது ஷெல்.

  

படிப்படியாக பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு மற்றும் LNG முதலியவற்றை வாங்குவதை படிப்படியாக குறைத்துக் கொள்ள ஷெல் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.