வணிகம்

வங்கிக் கடன் விகிதம் உள்ளிட்ட சில முக்கிய விவரங்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி கவர்னர்

வங்கிக் கடன் விகிதம் உள்ளிட்ட சில முக்கிய விவரங்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி கவர்னர்

நிவேதா ஜெகராஜா

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை என அவ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், தற்போது இருக்கும் 4% என்ற நிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தனது ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து, “பணப்புழக்கத்தை தற்போதுள்ள நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வங்கி டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டியும் தொடர்ந்து 3.35%- ஆகவே தொடரும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டிவிகிதம் அதே நிலையிலேயே நீடிக்கும். உணவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு குறைந்திருக்கும்போதிலும், அதனால் இந்திய பொருளாதாரம் மிண்டெழும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லையென்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளிலெல்லாம்கூட வட்டி விகிதம் அதிகரித்திருக்கும் நிலையில் இந்தியாவில் விகிதம் உயராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.