வணிகம்

வாரத்தின் முதல் வர்த்தக நாள் : சென்செக்ஸ், நிஃப்டி விளிம்புநிலை உயர்வு

வாரத்தின் முதல் வர்த்தக நாள் : சென்செக்ஸ், நிஃப்டி விளிம்புநிலை உயர்வு

webteam

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி விளிம்புநிலை உயர்வடைந்துள்ளது.

உலகப் பொருளாதாரம் மந்தத் தன்மை அடைந்துள்ள நிலையில், அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் அது எதிரொலித்துள்ளது. இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் மற்றும் இந்திய பங்குச் சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி ஆகியவை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. சென்செக்ஸ் அதிகபட்ச உயர்வாக 37,718.88 புள்ளிகளுக்கும், குறைந்த பட்ச நிலையாக 37,358.19 புள்ளிகளுக்கும் சென்றது. வர்த்தக நேர முடிவில் 37,402.49 புள்ளிகளுடன் சென்செக்ஸ் நிறைவடைந்தது. இன்றைய நிலவரப்படி 52.16 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது. சதவிகிதத்தின் அடிப்படையில் இது 0.14% மட்டுமே ஆகும். 

இதேபோன்று இந்திய பங்குச்சந்தை மதிப்பீட்டு குறியீடான நிஃப்டி அதிகபட்சமாக 11,146.90 புள்ளிகளுக்கும், குறைந்த பட்சமாக 11.037.85 புள்ளிகளுக்கும் சென்றது. இறுதியில் 11,053.90 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது 6.10 புள்ளிகள் அல்லது 0.06% உயர்வாகும். 

இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிகபட்சமாக 2.66% வளர்ச்சியடைந்தன. குறிப்பாக, வீழ்ச்சியில் இருந்த வங்கித் துறை மற்றும் ஆட்டோ ஸ்டாக்ஸ் இன்று சற்று உயர்ந்தன. அதேசமயம் யெஸ் வங்கி, பவர் கிரிட், ஒஎன்ஜிசி, எஸ்.பி.ஐ, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஹீரோ மோடோகார்ப், டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை 3.46% வீழ்ச்சியடைந்தன.