வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் 0.99% மற்றும் நிஃப்டி 1.16% சரிவுடன் நிறைவடைந்தன.
கடந்த 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு மும்பை பங்கு பந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் இந்த சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1500.27 புள்ளிகளும், நிஃப்டி 433.35 புள்ளிகளும் சரிவடைந்திருந்தன. இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் சரிவை சந்தித்துள்ளன.
அதன்படி, சென்செக்ஸ் 0.99% சரிந்து 37,090.82 புள்ளிகளுடன் முடிந்தது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1.16% சரிந்து 11,148.2 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. நிஃப்டி மதிப்பீட்டில் வங்கிகளின் பங்கு 5% குறைந்தது. அதிகபட்சமாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 9.76% வீழ்ந்தது. மேலும், மருந்து நிறுவனங்களும் பங்கு சந்தையில் சரிவை சந்தித்தன.